திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகளிர்க்கு நெல்லை அரசு அருங்காட்சியகம், இந்திய அரசு, நேரு யுவ கேந்திரா, ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பு, திருநெல்வேலி கற்பக விருட்சம் நற்பணி மன்றம் மற்றும் ஆர்.கே கன்ஸ்ட்ரக்சன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மங்கையர் மகுடம் - 2023 என்ற விழாவினை நடத்தினர்.
விழாவிற்கு அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருள் செல்வி, பாளையங்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சாந்தி, பொறியாளர் பாலன்னா, ரூபி அழகு நிலைய இயக்குநர் அருணா அருண், பாரத மாதா பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்த குமார், முத்துஸ் கராத்தே நிறுவனர் முத்துக்குமரன், சகா கலைக்குழு நிறுவனர் சகா சங்கர், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் 135 பெண்கள் இந்த விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் பறையாட்டம், கரகாட்டம் போன்ற கண்கவர் கிராமியக் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. யோகா, நடனம் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் ஜெயா, ஆர்.கே கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் ராம கிருஷ்ணன், பேட்டை வணிக வைசிய துவக்கப்பள்ளியின் ஆசிரியர் செல்வமாரிமுத்து, கற்பக விருட்சம் நற்பணி மன்ற தலைவர் ரம்யா, உணவு முறை மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் முகம்மது சக்காரியா, சிலம்ப ஆசிரியர் இசக்கிமுத்து, மேலும் கற்பக விருட்சம் நற்பணி மன்றத்தினை சேர்ந்த ஷியாம், ஸ்ரீ வர்தினி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli