முகப்பு /செய்தி /தூத்துக்குடி / பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டிய இளைஞர்... தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை அரிவாளால் வெட்டிய இளைஞர்... தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : தூத்துக்குடியில் தேர்வு எழுதிவிட்டு வந்த 12ம் வகுப்பு மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் தங்கமாரி, செக்காரக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று தேர்வு எழுதி விட்டு வந்த மாணவி தங்கமாரியை பள்ளி அருகே வைத்து சோலையப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தங்கமாரியை உடன் இருந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க : இனி மாஸ்க் கட்டாயம்... அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடு - காரைக்கால் ஆட்சியர் அதிரடி உத்தரவு

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் சோலையப்பனை தட்டப்பாறை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் அரிவாளால் வெற்றியை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

top videos
    First published:

    Tags: Crime News, Local News, Thoothukudi