தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது Net pack தீர்ந்ததால் 8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதியின் மகன் குகன். நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் இவர் பெற்றோரின் செல்போன்களில் பப்ஜி, ப்ரீ பயர் உள்ளிட்ட வீடியோ கேம்களை விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் சிறுவன் அதை கேட்கமால் செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அதே ஸ்டைல்.. நாலாபுறமும் பறக்கும் பந்து.. குட்டி விராட் கோலி இவர்தானாம்..
இந்நிலையில் நேற்று பெற்றோரின் இரண்டு செல்போன்களிலும் Net pack தீர்ந்ததால் வீடியோ கேம் விளையாட முடியாமல் மனவேதனையில் இருந்துள்ளார் மாணவன். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PUBG, Pubg game, Student Suicide, Thoothukudi