முகப்பு /செய்தி /தூத்துக்குடி / சர்வ சாதரணமாக போதை பொருள் கடத்தும் அதிர்ச்சி வீடியோ!

சர்வ சாதரணமாக போதை பொருள் கடத்தும் அதிர்ச்சி வீடியோ!

போதை பொருள் கடத்தல்

போதை பொருள் கடத்தல்

Thoothukudi Smuggling | கடலோர காவல் படை, சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறைகளின் தீவிர சோதனைக்குப் பின்பும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது.

  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு  போதைப் பொருள் மற்றும் பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக கடத்தப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தங்கம் போதைப் பொருட்கள் ,பீடி இலை, மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி பட்டினம்மருதூர் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பைபர் படகுகள் மூலம் சர்வ சாதாரணமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு நடுக்கடலில் மற்றொரு படகு மூலம் மாற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் இந்த வீடியோவில் வரும் ஆடியோவில் கடத்தல் மன்னன் நசீர் என்று போடுங்கள் என்ற ஆடியோவும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் , சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட துறைகளின் தீவிர சோதனைக்குப் பின்பும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு நடைபெறும் இந்த கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கியூப் பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

    First published:

    Tags: Crime News, Heroine, Smuggling, Thoothukodi