முகப்பு /செய்தி /தூத்துக்குடி / நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட படகு

நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட படகு

Drug smuggling | குஜராத்தில் சமீபத்தில் சுமார் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

போதை பொருள் கடத்தல் தொடர்பாக  நடுக்கடலில் வைத்து 6 பேரை பிடித்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  அவர்களது படகை பறிமுதல் செய்தனர்.

அண்மை காலங்களாக குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் பிடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 200 கடல் மைல் தொலையில் மர்ம படகை சுற்றி வளைத்தனர்.பின்னர் படகில் சோதனை நடத்தியபோது அதில் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

படகில் இருந்த 6 பேரை பிடித்து தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குஜராத்தில் சமீபத்தில் சுமார் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மேல் விசாரணைக்காக அவர்கள் 6 பேரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகு, தருவைகுளம் கொண்டு வரும் வழியில் தரைதட்டி மணலில் சிக்கியது. அதனை மீட்கும் பணி நடந்து வருகிறது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

top videos
    First published:

    Tags: Local News, Smuggling, Thoothukudi