முகப்பு /செய்தி /தூத்துக்குடி / முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு... விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி நியமனம்

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு... விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி நியமனம்

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்

தூத்துக்குடியில் விஏஓ கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக, தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டியாபுரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஜமால் விசாரித்து வந்தார்.

இதையும் படிங்க: உங்களுக்கு இப்போதுதான் முதல் குழந்தை பிறந்துள்ளதா..? நீங்கள் செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்..

top videos

    இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் ஜமால், உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ஜமால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி.எஸ்.பி சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Crime News, Thoothukudi