முகப்பு /செய்தி /தூத்துக்குடி / மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

அரசு பேருந்து

அரசு பேருந்து

thoothukudi | தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு புறப்பட்ட பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு சென்ற பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் தாறுமாறாக இயக்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக இயக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்திற்குள்ளேயே கூச்சலிட்டு பேருந்தை நிறுத்த சொல்லியுள்ளனர். மேலும், பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்து பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் மாற்று பேருந்தில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

top videos

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

    First published:

    Tags: Govt Bus, Thoothukodi