முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது...

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் 150க்கும் மேற்பட்டோரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

தூத்துக்குடியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைப்பயணமாக வந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணி மற்றும் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் கலவரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அப்பொழுது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க  கூட்டமைப்பினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அனுமதிக்காதைத் தொடர்ந்து போராட்டத்தின் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது...

top videos

    இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    First published:

    Tags: Sterlite