தூத்துக்குடியில் வரும் 18-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. மாநாடு பணிகளை கவனிப்பதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி வந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம். கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி நிவாரணம் வழங்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “கள்ளச்சாராய சாவு வரவில்லை என்றால் இன்று இவ்வளவு கள்ள சாராய வழக்கு பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு இந்த அரசு பதவி உயர்வு கொடுத்துள்ளது. திமுக சொத்துபட்டியலை வெளியிட அண்ணாமலை அதிமுகவினரின் சொத்துபட்டியலையும் வெளியிட்டிருக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி கோடநாடு கொலைக்கு பதவி விலகி இருக்க வேண்டும் . முதல்வர் வசித்த வீட்டில் மின்தடை ஏற்பட்டு ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் அதற்காக எடப்பாடி பழனிசாமி விலகினாரா” எனக் கேள்வி எழுப்பினார்.
இரண்டு பேரும் மாற்றி மாற்றி கூறி வருகிறார்கள் இரண்டு பேரும் ஒழிக்கப்பட வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களில் கொடநாடு வழக்கை விசாரணை செய்து முடிப்பேன் என்ற இப்போதைய முதல்வர் இரண்டு ஆண்டு காலம் ஆகிவிட்டது என்ன செய்தார். தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு குறைய வேண்டும் என்றால் மாற்று அரசு வேண்டும் ” என்றார்.
செய்தியாளர் : முரளிகணேஷ் (தூத்துக்குடி )
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Politics, Seeman, Tamil News