திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவரான முருகனை வழிபட்டார். பின்னர் கோவில் உற்சாகத்தில் உள்ள சண்முகர், பெருமாள், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ’விஷசாராயம் குடித்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் அரசு படிப்பிற்காக தாலியை அடமானம் வைக்கும் தாய்மார்களுக்கு என்ன செய்யப் போகிறது இந்த திராவிட மாடல் அரசு என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ’ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கதக்கதாகவும், சட்டப் போராட்டத்தில் தனக்கு அச்சம் இருந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வெளி நடப்பு தான் இருக்கிறது தவிர விவாதம் ஒன்றும் நடைபெறவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் கல்வி முறை மிக கொடுமையான முறையில் நடைபெற்று வருவதாகவும் தாய்மார்கள் மிக ஏழ்மையான நிலையில் இருப்பதனால் நகைகளை அடகு வைத்து தான் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும் என்ற நிலைமை உள்ளது. கல்வி இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது என்று திமுக அரசு கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்க தான் செய்கிறது.
மேலும் விஷச் சாராயம் குடித்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் அரசு படிப்பிற்காக தாலியை அடமானம் வைக்கும் தாய்மார்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்றும் ஆட்சியாளர்கள் சாராய ஆலைகளை நடத்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்குவதற்கு அனுமதியில்லை. கூட்டாட்சி நாடான இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆள வேண்டாம் எனவும் சுழற்சி முறையில் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் கட்சிகள் ஆளவேண்டும் என பேசினார்.
மேலும் காவிரி படுகையில் உள்ள தாதுக்களை எடுக்கும் இந்த அரசு ஏன் கங்கை படுகையில் அதை செய்யவில்லை? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது என்பது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார்.
செய்தியாளர் - பி.முரளி கணேஷ், தூத்துக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Seeman, Thoothukudi