முகப்பு /செய்தி /தூத்துக்குடி / “அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!

“அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!

நடிகர் விஜய் குறித்து பாவிஜய் கருத்து

நடிகர் விஜய் குறித்து பாவிஜய் கருத்து

Actor Vijay Politics | அரசியல் என்பது திறந்தவெளி பல்கலைகழகம் என பாடலாசிரியர் பா.விஜய் கருத்து

  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திரைப்பட பாடலாசிரியர் பா. விஜய் சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, வேல் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதால் திருச்செந்தூர் முருகனிடம் அருள் ஆசி பெற வந்தேன்.

நடிகர் மனோபாலாவின் இறப்பு திரையுலத்திற்கு பெரிய இழப்பு. திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் பிறந்த நாளிற்கும் தனியாக போனில் அழைத்து  பிறந்தநாள் வாழ்த்து சொல்ல கூடிய அளவிற்கு மிக சிறந்த மனிதர். அரசியல் என்பது திறந்தவெளி பல்கலைகழகம். அதனால், கமல்ஹாசனை போன்று விஜய்யும் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். நாவல்களை படமாக்குவதால் தமிழ் சினிமாவின் எல்லைகள் விரிவடையும். அது எழுத்தாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மிக பெரிய கௌவரவம் என தெரிவித்தார்.

மேலும் படம் இயக்குவத்தில் முழு கவனம் செலுத்துவதால் பாடல்கள் எழுதுவதை தற்போது  குறைத்து கொண்டதாகவும், இந்தியன் பாகம்-2  படத்தில் மிக சிறந்த பாடல் ஒன்றை எழுதியுள்ளதாகவும் கூறினார். திரையில் நடிகனாக நடிப்பதற்கு போதிய நேரமில்லை என்றும் அரசியல் மேடை மற்றும் அரங்கேற்றங்களில் பேசுவது என்பது எதிரணியில் உள்ளவர்களின் குறைகளை சூசமாக சுட்டி காட்டுவது தான். அப்படி தான் கவிதைகள் இருக்கும் எனவும் யாரையும் நேரடியாக குத்திகாட்டுவதற்கல்ல எனவும் கூறினார்.

செய்தியாளர் : முரளி கணேஷ் (தூத்துகுடி)

top videos
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Vijay Politics