முகப்பு /செய்தி /தூத்துக்குடி / தூத்துக்குடியில் கலவரத்தில் முடிந்த கபடி போட்டி.. பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

தூத்துக்குடியில் கலவரத்தில் முடிந்த கபடி போட்டி.. பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

கபடி போட்டியில் மோதல்

கபடி போட்டியில் மோதல்

Tuticorin Kabadi Fight | தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிப்பு

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கபடி போட்டி தொடர்பாக இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவி உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் துலுக்கன்குளம் கிராமத்தில், அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் கலைஞானபுரத்தை சேர்ந்த கபடி வீரர்கள் தோல்வியுற்று விரக்தியில் இருந்தபோது துலுக்கன்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கைதட்டி எரிச்சலூட்டும் விதமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துலுக்கன்குளத்தைச் சேர்ந்த இளைஞர்களை கலைஞானபுரம் இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு கிராம மக்கள் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கற்களைக் கொண்டும், கைகளாலும் தாக்கிக் கொண்டனர். இதில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி உட்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறித்த குளத்தூர் காவல்துறையினர்  உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக  இரு கிராம மக்களிடையே விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய கலைஞானபுரம் கிராமத்தினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    First published:

    Tags: Local News, Tuticorin