தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் 3 லட்சம் ரூபாயை இழந்த தம்பியை அவரது அண்ணன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில்லாநத்தம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிகிறது. தொடர்ந்து தனது சகோதரர் முத்துராஜிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அதையும் ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்தார். தொடர்ந்து முத்துராஜ், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெயிலுக்கு ரெஸ்ட்.. வரப்போகுது கனமழை.. வானிலை அலெர்ட் இதோ!
இதனிடையே பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்லதம்பி கூறிவந்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் தனது சகோதரரை பண்டாரம்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார்.
பின்னர், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Online rummy, Thoothukudi