முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ட்விட்டரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு... பாஜக நிர்வாகி 'கட்டெறும்பு' இசக்கி கைது

ட்விட்டரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு... பாஜக நிர்வாகி 'கட்டெறும்பு' இசக்கி கைது

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி

கைது செய்யப்பட்ட இசக்கி மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்த கருத்து சர்ச்சையானது ஏன்?

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi, India

ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் அந்த தீர்ப்பை பிரதிபலிக்கும் வகையிலும், யுவராஜுக்கு ஆதரவாகவும் ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் ஒரு சர்ச்சை கருத்து பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவு ஜாதி மோதலையும், வன்முறையையும் தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை பதிவு செய்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பதிவு… குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் மன்னிப்பு கேட்டார்…

ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் கருத்துக்களை பதிவிட்டவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி என்பது தெரியவந்தது. இசக்கி, பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இசக்கியிடம் ஶ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாயவன் மற்றும் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இசக்கி மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்பு இசக்கி ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாட்களுக்கு தினமும் ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் இசக்கி கையெழுத்திட வேண்டும் என்றும் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் கட்டெறும்பு என்ற இசக்கி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

First published:

Tags: Crime News, Salem, Tuticorin