முகப்பு /செய்தி /தூத்துக்குடி / தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி - தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி - தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி!

கொரோனா

கொரோனா

Thoothukudi corona death | கடந்த மாதம் திருச்சியில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபன் (55) என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலையில் பார்த்திபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் திருச்சியில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: முரளிகணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Corona death, Local News, Thoothukodi