முகப்பு /செய்தி /தூத்துக்குடி / 82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

பிடிக்கப்பட்ட கஞ்சா

பிடிக்கப்பட்ட கஞ்சா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ கஞ்சா பறிமுதல்.

  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில்  மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை மதுரை மாவட்ட போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளம் கிராமத்தில் சசிகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், அங்கு 82 மூட்டைகளில் சுமார் 2000 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், கார் உள்ளிட்டவற்றை மதுரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்ட போலீசார் கஞ்சா வேட்டையை நடத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட போலீசாரும்  உறுதுணையாக செயல்பட்டனர்.

top videos

    செய்தியாளர் : பி.முரளிகணேஷ் (தூத்துக்குடி)

    First published:

    Tags: Police