ஹோம் /தேனி /

மகளிர் நல வாரிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்... தேனி கலெக்டர் தகவல்...

மகளிர் நல வாரிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்... தேனி கலெக்டர் தகவல்...

தேனி கலெக்டர்

தேனி கலெக்டர்

Theni | பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என தேனி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆரவற்ற பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளை கொடுக்க பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுயஉதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன், கன்னியமான முறையில் வாழ்வதற்கான இந்த நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முழுமை அடையாத சாலை பணியால் அவதிப்படும் கூடலூர் மக்கள் 

இந்த நல வாரியத்துக்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இதன் மூலம் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பெண்களின் வாழ்கை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை https://theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதில், விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி பண்கள், மின் அஞ்சல் முகவரி, கல்வி தகுதி, நீங்கள் வகித்த பதவிகள், மத்திய அரசு, மாநில அரசுகளில் பெற்ற விருது, வெளியூர் அனுபவம் உறுதி மொழிகனைளம் நிரப்பி அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உரிய ஆவணங்களுடன் வரும் 4ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமுக நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni