Home /theni /

வாழ்வாதாரம் இழக்கும் வேதனையில் புகைப்பட கலைஞர்கள்.. அழிந்து வரும் போட்டோகிராஃபி தொழில்..!!

வாழ்வாதாரம் இழக்கும் வேதனையில் புகைப்பட கலைஞர்கள்.. அழிந்து வரும் போட்டோகிராஃபி தொழில்..!!

உலக

உலக புகைப்பட தினம் 2022, தேனி

World Photography Day 2022 : உலக புகைப்பட தினத்தை கொண்டாடும் விதமாக, தேனியில் புகைப்பட கலைஞர்கள் கண் தானம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
 183 வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள புகைப்படக்கலைஞர்கள் கேமராக்களுடன் ஊர்வலமாக சென்று புகைப்படக் கலைஞர்களின் தேவையை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக அணிவகுத்துச் சென்றனர்.

உலக புகைப்பட தினம் :-

வரலாற்றுச் சம்பவங்களையும் அதன் உண்மைத் தன்மையையும் நமக்கு விளக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது புகைப்படம் மட்டுமே. புகைப்படம் எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரம் நாட்கள் செல்ல செல்ல அதள பாதாளத்திற்கு செல்வதாக புகைப்படக் கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

போட்டோக்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரியமான ஒன்று. தொடக்க காலத்தில் பிலிம் மூலம் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் புகைப்படமாக மாறியும், விதவிதமான புதிய ரக கேமராக்கள் வந்துவிட்டன. தற்போது நாம் அனைவரும் வைத்திருக்கும் செல்போன்களில் என்னதான் செல்ஃபி எடுத்தாலும், அது நம்மை ஆட்கொண்டிருந்தாலும், பள்ளி காலங்களில் பஸ் பாஸ், தேர்வு ஹால்டிக்கெட், நண்பர்களுடனான பிளாக் அன் ஒயிட் குழு புகைப்படங்கள் இன்றும் நம் வீட்டு சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உலக புகைப்பட தினம் 2022, தேனி


மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாளாகவே ஆகஸ்ட் 19 தேதியை உலக புகைப்பட தினமாக கொண்டாடுகிறோம்.

தேனியில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் உலக புகைப்பட தினத்தை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் 183 வது உலக புகைப்பட தினத்தை (ஆகஸ்ட் 19) முன்னிட்டு தேனி புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துணியால் ஆன பைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும், புகைப்படக் கலைஞர்கள் கண்தானம் செய்ய பதிவு செய்யும் நிகழ்வும், புகைப்படக் கலைஞர்களின் தேவையை பொதுமக்கள் புரிந்து கொள்ள புகைப்படக் கலைஞர்கள் ஊர்வலமாக கேமராவுடன் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

உலக புகைப்பட தினம் 2022, தேனி


கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புகைப்பட கலைஞர்கள் தற்போதும் போதிய வருவாய் இன்றி தவித்து வருவதாக புகைப்பட கலைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பெருத்த நஷ்டத்தில் புகைப்பட தொழில் :-

இதுகுறித்து தேனி மாவட்ட புகைப்படக் கலைஞர்கள் கூறுகையில்,
" 183 வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு தேனி நகரிலுள்ள புகைப்பட சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புகைப்பட தினத்தை கொண்டாடினோம். ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வரும் எங்களது சங்கமானது இந்த ஆண்டு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த துணிப் பையை வழங்கினோம். எங்களது சங்கத்தில் உள்ள புகைப்படக்கலைஞர்கள் கண் தானம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. தற்போது புகைப்படக் கலைஞர்களின் தேவை குறைந்து உள்ளதால், புகைப்பட கலைஞர்களை பொதுமக்கள் ஊக்குவிக்கும் விதமாக கேமராக்களுடன் ஊர்வலமாக சென்றோம் .

உலக புகைப்பட தினம் 2022, தேனி


தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளதால், அதிலேயே பெரும்பாலானவர்கள் தங்களின் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் செல்போன் நிறுவனங்களும் கேமராக்களை அப்டேட் செய்து புதிய வகை செல் போன் மாடல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு எங்களைப்போன்ற போட்டோகிராபர்களின் தேவை குறைந்துவிட்டது. எங்களுக்கு கிடைக்கும் நிகழ்ச்சிகளில் நாங்கள் எதிர்பார்த்த தொகை எங்களுக்கு கிடைப்பது இல்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எங்களுக்கு பிடித்த தொழில் இது என்பதால் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்வதற்கும் மனமில்லை. அதுமட்டுமல்லாமல் இன்று பெரும்பாலானோர் இல்லங்களில் DSLR ரக கேமராக்கள் வைத்துள்ளனர். தற்போது எங்களுக்கு வியாபாரம் மிகக் குறைந்து விட்டது எனலாம். மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிரேம் களின் விலை தற்போது கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோகளில் போட்டோ ஒன்றின் விலையும் ஏற்றமும் கண்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல புகைப்பட தொழில் எந்த நிலைக்கு செல்லும் என்பது எங்களுக்கு அச்சமாக உள்ளது என்கின்றனர் புகைப்பட கலைஞர்கள்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி