ஹோம் /தேனி /

தேனி பங்களா மேட்டில் என்ஆர்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணி...

தேனி பங்களா மேட்டில் என்ஆர்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற உலக மனநல தினம் விழிப்புணர்வு பேரணி...

தேனி

தேனி என்ஆர்டி கல்லூரி மாணவிகள்

World Mental Health Day 2022 | உலக மனநல தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் தேனி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி பங்களா மேட்டில் உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம். இந்த தினம் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் தேனி பங்களா மேட்டில் உலக மனநல தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் என்ஆர்டி நர்சிங் கல்லூரி இணைந்து என் ஆர் டி கல்லூரி மாணவிகள் தேனி நகரில் உள்ள முக்கிய சாலைகளின் வழியாக மனநல விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தில் நிலச்சரிவால் திசை மாறி கேரளாவுக்கு செல்லும் நீர்வீழ்ச்சி..! 

மனநல விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த விழிப்புணர்வு பேரணியில் என்ஆர்டி தியாகராஜன் மற்றும் தேனி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

என்ஆர்டி கல்லூரி மாணவிகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Theni