முகப்பு /தேனி /

கம்பம் நகரில் 144 தடை உத்தரவு வாபஸ் - தேனி கலெக்டர் அறிவிப்பு

கம்பம் நகரில் 144 தடை உத்தரவு வாபஸ் - தேனி கலெக்டர் அறிவிப்பு

X
கம்பம்

கம்பம் நகரில் 144 தடை உத்தரவு வாபஸ்

144 Prohibitory Order in cumbum Nagar : அரிசிக் கொம்பன் யானையை பிடிக்கப்பட்டதால் கம்பம் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை பிடிக்கப்பட்டதால் கம்பம் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த 27ம் தேதி அரிசிக்கொம்பன் யானை நகர் பகுதிக்குள் உலா வந்து பொதுமக்களை விரட்டியது. பின்னர் கம்பம் நகர் பகுதிக்குள் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது. கம்பம் பகுதிக்குள் வந்து பொதுமக்களை விரட்டியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் வெளியே வருவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அரிசிக்கொம்பன் யானை பொதுமக்களை தாக்காமல் இருக்க கம்பம் நகர் முழுவதும், கம்பம் சுற்று வட்டார கிராமப்புறங்களிலும் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டது.

கம்பம் நகரில் 144 தடை உத்தரவு வாபஸ்

பொதுமக்கள் அரிசிக்கொம்பன் யானை செல்லும் பாதையில் எவ்வித இடையூறு செய்யாமல் இருக்கு வேண்டும் என்பதற்காகவும் புகைப்படம் மற்றும் வீடியோ ஏதும் எடுக்க யானையின் அருகில் செல்வதை தவிர்ப்பதற்காகவும் யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விடப்படும் வரை பொதுமக்கள் தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : அரிசிக்கொம்பன் காட்டுயானை இங்கு விடப்படுகிறதா? மீண்டும் கலக்கத்தில் மக்கள்..

தற்போது அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்படுகிறது” என அறிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் கடந்த 4 நாட்களாக தோட்ட வேலைகளை மேற்கொள்ள முடியாமல் வந்திருந்த விவசாயிகள் தற்போது அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டதால் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.

First published:

Tags: Local News, Theni