தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் வாழை, திராட்சை தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
யானை கஜம் மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் பரமசிவம், அதே பகுதியில் தற்போது செவ்வாழை விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த விளைநிலங்களுக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள் அந்தப் பகுதியில் உள்ள விவசாயி பரமசிவம் என்பவர் தோட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.
தற்போது செவ்வாழை நல்ல வரத்து ஏற்பட்டு குழை தள்ளும் பருவ நிலையில் உள்ள வாழை மரங்களை யானைகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணி... கலெக்டர் முக்கிய அறிவிப்பு
மரம் ஒன்றுக்கு ரூ 500 வரை செலவு செய்து உற்பத்தி செய்த விவசாயிகள் உற்பத்திச் செலவை எடுக்க முடியாமல் பெரிதும் நஷ்டம் அடைந்து விவசாயிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னதாக இதே பகுதியில் மூன்று நான்கு முறை யானைகள் வந்து விலை நிலங்களை சேதப்படுத்தி சென்றதாகவும் ஆனால் இந்த முறை கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்று விட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள அகலியை கடந்தும் யானைகள் விளைநிலங்களுக்குள் உலா வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அகழி வெட்டி யானை உட்பட பல்வேறு வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யானைகள் அட்டகாசத்தால் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளை நிலங்களுக்குள் உலா வரும் யானை கூட்டங்களால் அந்தப் பகுதியில் விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni