Home /theni /

தேனியின் கல்வி கண் திறந்த ஹாஜி கருத்த ராவுத்தர் - யார் இவர்?

தேனியின் கல்வி கண் திறந்த ஹாஜி கருத்த ராவுத்தர் - யார் இவர்?

ஹாஜி

ஹாஜி கருத்த ராவுத்தர்..

Uthamapalayam Hajee Karutha Rowther Howdia College : ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் நிறுவனரின் 64வது நினைவு நாள் தினத்தை போற்றும் விதமாகவும், அவரது சேவைகளை நினைவுக் கூறும் விதமாகவும் கல்லூரி மாணவர்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
தேனி மாவட்ட மக்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு 1956 ஆண்டு உயர் கல்வி நிலையமான ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியைத் உத்தமபாளையத்தில் தோற்றுவித்தார் முகமது மீரா ராவுத்தர் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர்.

இக்கல்லூரியின் நிறுவனரான ஹாஜி கருத்த ராவுத்தர் என்ற செ. முகமது மீரா ராவுத்தர் 1888ல் பிறந்தவர். அன்றைய காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் உயர்கல்வி நிலையங்கள் இல்லாததால் உயர் கல்வியைப் பெற தேனி மாவட்ட மக்கள் மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் சென்று உயர்கல்வியை பயில வேண்டிய நிலை இருந்தது. கல்வியறிவு பெறாத ஹாஜி கருத்த ராவுத்தர் தேனி மாவட்ட மக்களும் தம் கிராமப்புறத்தைச் சார்ந்த ஏழை மக்களும் உயர்கல்வி கற்க கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும் என்று விரும்பினார்.

இதன்படி, அவர் தமது பிறந்த ஊரான உத்தமபாளையத்தில் கல்லூரி ஒன்றை நிறுவும் முயற்சியில் முழு மூச்சில் ஈடுபட்டார். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர், தமிழ்வேள், பி. டி. ராஜன், அன்றைய கல்வித்துறை இயக்குநர் திருமிகு நெ. து. சுந்தர வடிவேலு ஆகியோரை சந்தித்து கல்லூரி தொடங்குவதற்கான அங்கீகாரத்தை பெற்றார்.

உயரிய அங்கீகாரம் :-

தனக்கு சொந்தமான 58.81 ஏக்கர் நிலத்தையும், இரண்டு லட்சம் ரூபாயையும் கல்லூரிக்கு வழங்கினார். இதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி உதயமானது.

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி


அன்றைய காலகட்டத்தில் கிராமப்புறத்தில் தொடங்கப்பட்ட 8வது கல்லூரியாகவும், 120 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியை பெருந்தலைவர் காமராஜர் அவர்களே திறந்து வைத்தார். தேனி மாவட்டத்தில் முதல் முதலாக உருவாக்கிய இக்கல்லூரியில் தற்போது 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள்.

கடந்த 66 ஆண்டுகளாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வரும் ஏழை விவசாய மக்களுக்கு உயிர்கல்வி அளிப்பதில் இக்கல்லூரி பெரும் பங்காற்றி வருகிறது. இக்கல்லூரி படிப்படியாக வளர்ச்சி அடைந்து சமீப காலத்தில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால்( A ) என்ற சிறந்த தர மதிப்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம்


சுதந்திரப் போராட்ட வீரர் :-

உத்தமபாளையம் பகுதியில் சிறந்த மனித நேயராகவும், இறை பற்றாளராகவும், சமூக நல்லிணக்க நாயகனாகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் திகழ்ந்துள்ளார் கருத்தராவுத்தர். சுதந்திரப் போராட்ட காலத்தில் அண்ணிய ஆடைகளை தவிர்ப்போம் என்ற கொள்கையை காந்தியடிகள் ஏற்றுக் கொண்டபோது, அதை கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் செயல்படுத்த முழு முயற்சியும் ஏற்றுக் கொண்டவர் கருத்த ராவுத்தர்.

ஹாஜி கருத்த ராவுத்தர் 1954 ஆம் ஆண்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மையம் அமைத்திட தனது சொந்த செலவில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். உத்தமபாளையம் பகுதியில் பிளேக் நோய் தாக்கம் அதிகரித்த போது, வெளிமாநிலங்களில் இருந்து சொந்த செலவில் மருந்துகளை வாங்கி பொது மக்களுக்கு வழங்கியுள்ளார். உத்தமபாளையம் பகுதியில் ஆரம்ப பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை தொடங்கி உள்ளார். தற்போது அந்தப் பள்ளிகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஹாஜி கருத்தராவுத்தர் அரசினர் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. சமீப காலத்தில் உத்தமபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க கல்லூரியின் இடத்தையும் வழங்கியுள்ளனர் நிர்வாகத்தினர் .

மாணவர்கள்


தேனி மாவட்டத்தில் முதல் முதலாக உயர்கல்வி நிலையமான ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியை உருவாக்கி, தேனி மாவட்ட மக்கள் உயர்கல்வி பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் . இக்கல்லூரியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், பல்வேறு அரசு பணிகளில் உள்ள நபர்களும் முன்னாள் மாணவர்களாக கல்லூரியில் பயின்றவர்களே.

ஹாஜி கருத்த ராவுத்தர் நினைவு தினம்


அமைதி ஊர்வலம் :-

கல்விச் சேவையில் முழு முயற்சியை மேற்கொண்ட கருத்த ராவுத்தர் 1958 ஆம் ஆண்டு தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார்.  இவரின் நினைவு தினத்தை போற்றும் விதமாகவும், கல்விச் சேவையில் இவர் ஆற்றிய முக்கிய பணியை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில் இன்று தென் மாவட்டங்களில் பிரபலமான ஹாஜி கருத்தராவுத்தரின் 64 வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி M.தர்வேஷ் முகைதீன், கல்லூரியின் ஆட்சிமன்ற குழு தலைவர் ஜனாப்.S. செந்தால் மீரான், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள்,கல்லூரியின் முதல்வர் ஹாஜி. டாக்டர். H.முகமது மீரான்,கல்லூரியின் பேராசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று நிறுவனரின் நினைவிடத்தில் என். சி.சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து நிறுவனரின் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து நினைவு அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர்கள் பேராசிரியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி