ஹோம் /தேனி /

போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

போடிமெட்டு சுற்றுலா

போடிமெட்டு சுற்றுலா

Theni district tourist spot : பைக் அல்லது காரில் போடிமெட்டுக்கு சுற்றுலா சென்றால், ஒரே நாளில் அழகுமிகுந்த பல இடங்களையும், வியூ பாயிண்ட் களையும் கண்டு ரசிக்கலாம். இந்த பயணம் உங்களுக்கு மறக்கமுடியாத அனுவபத்தைக் கொடுக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

போடிமெட்டு சுற்றுலா தலம் தேனி மாவட்டத்தில் உள்ள அருமையான இடம். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் எல்லை பகுதியில் இருக்கும்  இந்த இடத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

தேனியின் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த போடிமெட்டுக்கு, தேனியில் இருந்து சென்றால், போடி விளக்கு, கோடங்கிபட்டி, போடியநாயக்னூர், மந்தல் உள்ளிட்ட பகுதிகளை கடந்தால் போடிமெட்டை அடைய முடியும்.

பயணத்தை நாம் பகல் நேரத்தில் தொங்கினால், முதலில் வெயில் நிறைந்த பகுதியில் இருந்து தொடங்கும் நம் பயணமானது, மலை மேலே செல்ல செல்ல குளிர் வந்து நம்மை தழுவிக்கொள்ளும். ஆங்காங்கே இடது புறம் காட்சி பகுதிகள் (வியூபாயிண்ட்) இருக்கும். வனப்பகுதிகள் ரம்யாமாக இருக்கிறது. பகல் நேரங்களில் வாகனங்களில் செல்வது மிகவும் எளிது. ஆனால், இரவில் சென்றால், ஆபத்துகள் காத்துக்கொண்டிருக்கும், விபத்தும் கூட ஏற்படலாம். எனவே பகலில் செல்வதே சிறந்தது,

போடிமெட்டு சுற்றுலா

போடிமெட்டுக்கு செல்லும் வழியில், இயற்கை அழகை ரசித்துக் கொண்டே, தமிழகத்தில் இருந்து கேரளா பிரியும் பகுதிக்குச் சென்றால், உங்கள் மனதை மயக்கும் இயற்கை காட்சிகளை கண்டு மெய் சிலிர்க்கலாம். நீங்கள் கார் அல்லது பைக்கில் சென்றால் ஆங்காங்கே நிறுத்தி, அழகான வியூ பாயிண்ட்களையும் கண்டு ரசிக்க வசதியாக இருக்கும். சாலைகள் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும். மேலே செல்லச் செல்ல குளிர்ச்சியின் அளவும் அதிகமாகி கொண்டே வருவதை உணரமுடியும். இந்த போடிமெட்டு சாலை பயணம் உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

போடிமெட்டு சுற்றுலா

மேலே ஏறி போடி மெட்டிற்கு வந்ததால், அங்கே கேரளா மற்றும் தமிழகத்தைப் பிரிக்கும் பகுதியைக் காணலாம். இதன் பிறகு நீங்கள் பயணத்தை தொடங்க விரும்பினால், இடுக்கி மாவட்டத்திற்குள் செல்லாம். அங்கே, பூப்பாறை, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியும்.

Must Read : அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! - விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

பூப்பாறை சுற்றுலா தலத்தில், யானை இறங்கல் வியூ பாயிண்ட், பூங்கா, அருவிகள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றின் அழகிய காட்சிகளை கண்டு ரசிக்கலாம். யானை இறங்கல் பகுதிக்கு இரு சக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், 4 சக்கர வாகனத்துக்கு 40 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

போடிமெட்டு சுற்றுலா

இங்கே படகு சவாரியும் செய்யலாம். இதற்கு துடுப்பு படகு, கால் மிதி படகு, விசை படகுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் பயணம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் கட்டமாக வசூலிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், இங்கு உங்களின் பசியைப் போக்க சுவைமிகுந்த உணவகங்களும் இருக்கின்றன. இத்தனை இடங்களையும் நீங்கள் ஒரே நாளில் சென்று பார்த்து ரசித்துவர முடியும். இந்த அழகிய சுற்றுலா தலத்தை மிஸ் பண்ணாம பாருங்க என்ஜாய் பண்ணுங்க.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Theni, Tourism, Tourist spots