முகப்பு /தேனி /

சின்னமனூர் : முழு ஊரடங்கு ரத்து - வார விடுமுறை எப்போது? விளக்கமளித்த வர்த்தக சங்கத்தினர்

சின்னமனூர் : முழு ஊரடங்கு ரத்து - வார விடுமுறை எப்போது? விளக்கமளித்த வர்த்தக சங்கத்தினர்

X
சின்னமனூர்

சின்னமனூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து வணிகக் கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் வார விடுமுறை நாளினை மாற்றி, வரும் நாட்களில் வார விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது வர்த்தக சங்கம்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

சின்னமனூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிவித்து வணிகக் கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் வார விடுமுறை நாளினை மாற்றி, வரும் நாட்களில் வார விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது வர்த்தக சங்கம்.

வார விடுமுறை :-

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வர்த்தக சங்க அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக கடைகள் உறுப்பினராக சேர்ந்து இயங்கி வருகிறது. பொதுவாக சின்னமனூர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் கீழ் செயல்படும் கடைகளுக்கு சனிக்கிழமை வார விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமையை முழு ஊரடங்கு தினமாக அறிவித்ததை அடுத்து கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமையை வார விடுமுறையாக மாற்றி சனிக்கிழமையை வேலை நாட்களாக அறிவித்து செயல்பட்டு வருகிறது சின்னமனூர் பகுதியில் உள்ள வணிக கடைகள்.

இந்த நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு இருக்காது என தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில் , சின்னமனூர் வர்த்தக சங்க அமைப்பினர் வார விடுமுறை பற்றிய விளக்கத்தை அளித்துள்ளனர்.

தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்ததை தொடர்ந்து சின்னமனூர் பகுதிகளில் மீண்டும் சனிக்கிழமையை வார விடுமுறை நாளாக செயல்படும் என வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாட்களாக மாற்றப்படும் எனவும் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Theni