தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கு புதிதாக அமக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் எவ்வளவு வேகத்தில் ரயிலை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்-மதுரை இடையிலான மீட்டர் கேஜ் பாதை கடந்த டிசம்பர் 31, 2010 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது. அதன்படி, தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், போடி-மதுரை இடையே அகல ரயில் பாதையில் முதல் கட்டமாக மதுரையில் இருந்து தேனி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தேனியில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் போடி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில், போடி ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
ரயில் பாதை பணி நிறைவடைந்ததையொட்டி, கடந்த மாதம் 29ஆம் தேதி போடியில் இருந்து தேனி வரை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு செய்தார். அப்போது ரயில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் 118 கி.மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போடி-மதுரை அகல ரயில்பாதையில் 80 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கிக் கொள்ளலாம். ரயில் பாதையில் சில இடங்களில் கிளாம்புகள் சரி செய்ய வேண்டும். தங்கப்பாலம் என்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பைப் லைன்களில் மாற்றம் செய்ய வேண்டும்.
Must Read : தீராத நோய்களையும் தீர்க்கும் உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம்... ஆருத்ரா தரிசனம்
ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாள்வதற்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து போடி-மதுரை இடையே ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Train