முகப்பு /தேனி /

தேனியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தேனியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

X
தேனி

தேனி ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறைகளின் சார்பில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமை ஒட்டி கடந்த இரு வாரங்களாக ராஜதானி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளில் முன் மனுக்கள் பெறப்பட்டு, அதில் வருவாய் துறையினர் மூலமாக 347 பயனாளிகளுக்கு 83,00,500 ரூபாய், பொது சுகாதாரம் மூலமாக 17 பயன்பாடுகளுக்கு 14,000 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு 27,098 ரூபாய், தோட்டக்கலை துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு 24,000 ரூபாய், வேளாண்மை துறை மூலமாக 3 பயனாளிகளுக்கு 10,000 ரூபாய், பிற்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை மூலமாக 18 பயனாளிகளுக்கு 87,678 ரூபாய், என மொத்தம் 389 பயனாளிகளுக்கு ரூபாய் 84,63,276 மதிப்புள்ள நலத்திட்டங்களை தேனி ஆட்சியர் வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தமிழக அரசின் நலத்திட்டங்களை குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni