ஹோம் /தேனி /

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது..  

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது..  

X
கம்பம்

கம்பம்

Cumbum : கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, தையல் இயந்திரம் ஊன்றுகோல் மளிகை சாமான், நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் நகரில் இயங்கி வரும் தேனீக்கள் அறக்கட்டளை சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனீக்கள் அறக்கட்டளையின் 3ம் ஆண்டு துவக்க விழா, உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மளிகை சாமான் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தையல் இயந்திரம், நிதி உதவி, பார்வையற்றோருக்கு ஊன்றுகோல், பின்தங்கிய மாற்றுத்திறனாளிக்கு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்தல், சாதனைபுரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன், கம்பம் வடக்கு மற்றும் தெற்கு நகர செயலாளரான வீரபாண்டியன் செல்வகுமார், வின்னர் ஸ்போர்ட்ஸ் அலீம், தேனீக்கள் அறக்கட்டளை போட்டோ பாண்டி, கம்பம் கூடலூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கும் நிதியை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தியுள்ள கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரை பாராட்டும் விதமாக தேனீக்கள் அறக்கட்டளை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்.

First published:

Tags: Local News, Theni