ஹோம் /தேனி /

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை

வைகை அணை

Vaigai Dam : தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இருக்கிறது, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து 70 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டு, அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. வைகை அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில், அந்த தண்ணீர் உபரியாக ஆற்றில் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் அர்ப்பரித்து கொட்டுகிறது.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு! 

தேனி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உபரியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தொடர்பாக 5 மாவட்ட நிர்வாகங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை கடிதமும் அனுப்பப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Flood alert, Local News, Theni, Vaigai dam level