தேனி மாவடத்தில் உள்ள வைகை அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வைவை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல், கிளை கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில், வைகை அணையின் 58ஆம் கால்வாயில் கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அந்த கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்
இந்தநிலையில், தற்போது வைகை அணை மீண்டும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, 58ஆம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, 58ஆம் கால்வாயில் தற்போது வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கால்வாயால் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆயினும், இந்த வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், அந்த தண்ணீரானது உசிலம்பட்டிக்கு வந்து சேர அதிக நாட்கள் ஆகும் என்பதால், கூடுதலாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து 200 கனஅடி தண்ணீரை இந்த வாய்க்காலில் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Vaigai dam level