ஹோம் /தேனி /

தேனி வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - 33 கண்மாய்கள் நிரம்பும்

தேனி வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - 33 கண்மாய்கள் நிரம்பும்

தேனி

தேனி

Water opening in 58th Canal From Vaigai Dam | தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 111 அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்க பகுதியில் 71 அடி நீரை தேக்கி சேமித்து வைக்க முடியும்.

இதற்கிடையில், தொடர் கனமழை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில், வைகை அணையின் வலது கரையில் அமைந்துள்ள 58ம் கால்வாயில், தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க : தேனியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?

அதனை ஏற்ற தமிழக அரசு, வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி கால்வாயில் தண்ணீரை திறந்துவிடப்பட்டது. அதன்படி, வினாடிக்கு 150 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அந்த தண்ணீர் கால்வாய் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களை சென்றடையும். இதன் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் 1,912 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 373 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, இந்த 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். இதனால் அணையின் நீர்மட்டத்தை 68 அடியில் நிலை நிறுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அணையின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி, 69.85 அடியாக இருந்தது. அணைக்கு விணாடிக்கு 1,390 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருகிறது. அணையில் இருந்து மொத்தமாக 1,475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni