Home /theni /

தேனி விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக பிடிஆர், பெரியார் மற்றும் 18ஆம் கால்வாய்களில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தண்ணீரை திறந்துவிட்டார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாற்றில் இருந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், டி.மீனாட்சிபுரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக கூடலூரை அடுத்து லோயர்கேம்ப் மின் நிலையம் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, அதில் இருந்து தண்ணீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த 18ஆம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டு 4,614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தேனியில் நெல்லுக்கு மாற்று பயிர்களுக்கு ரூ.25,000 வரை மானியம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தநிலையில், 18ஆம் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்த கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டார். இந்த கால்வாய் வழியாக வினாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் இருந்து பிடிஆர் மற்றும் பெரியார் கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாய்கள் வழியாக தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி வீதம் 100 நாட்கள் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி