தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால், 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக இருக்கிறது. நேற்று 1,076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,510 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1,519 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 4,695 மி.கன அடியாக உள்ளது.
இதேபோல,பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அதன் நீர் மட்ட உயரம் 40.40 அடியாக உள்ளது. நீர் வரத்து 1,481 கன அடியாகும். அணையில் இருந்து திறக்கடும் தண்ணீரின் அளவு 511 கன அடியாகும். நீர் இருப்பு 7,234 மி.கன அடியாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. நீர் வரத்து 100 கன அடியாக இருக்கிறது. தண்ணீர் திறப்பு 40 கன அடியாகும். அணையின் நீர் இருப்பு 433.28 மி.கன அடி ஆகும்.
Must Read :கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாகும். அணைகு நீர் வரத்து 203 கன அடியைக உள்ளது. 30 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 100 மி. கன அடியாகும். தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni, Vaigai dam level