ஹோம் /தேனி /

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு - முதல்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தல்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு - முதல்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தல்

முல்லைபெரியாறு அணை

முல்லைபெரியாறு அணை

Theni District | தமிழக -கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தமிழக -கேரள எல்லையில் அமைந்திருக்கிறது முல்லைப்பெரியாறு அணை. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த அணையில் பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதிப்படி இன்று (வியாழக்கிழமை) வரை அணையில் 139.50 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக அதிகரித்து காணப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 2,276 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து, தமிழக பகுதிக்கு வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணியின் நீர்மட்டம் தற்போது 136 அடியை எட்டியதால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார், வல்லக்கடவு மற்றும் சப்பாத்து ஆகிய பகுதி மக்களுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கும்படி இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கவும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Flood alert, Local News, Mullai Periyar Dam, Theni