ஹோம் /தேனி /

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு - தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்டம்  இது தான்..!

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு - தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்டம்  இது தான்..!

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை

Theni District Dam Levels | தேனி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழைப்பொழிவு எதுவும் பதிவாகாத காரணத்தினால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில்  தற்போது பெரும்பாலும் மழை பொழிவு இல்லாத காரணத்தினால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது . மாவட்டத்தில் உள்ள அணைகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்த விவரம்.. 

மழை பதிவு :-

தேனி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழைப்பொழிவு எதுவும் பதிவாகாத காரணத்தினால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது . முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதிகளிலும் கேரளா மாநிலத்திலும் மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது . நேற்றைய நிலவரப்படி தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகவில்லை .

மேலும் படிக்க:  போடிமெட்டு சுற்றுலா... பைக், காரில் சென்றால் இயற்கை அழகில் முழுமையாக மூழ்கித் திளைக்கலாம்!

நீர்மட்டம் :-

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ...

71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 70.44 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 974 கனஅடியாக உள்ளது. 1769 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 55.00 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து 132 கன அடியாக உள்ளது . நீர் வெளியேற்றம் 40 கண்ணாடியாக உள்ளது

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 42 கன அடி . 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

52.55அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 03 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது. அனைத்து நீர்வரத்து 673 கன அடி. 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

Published by:Arun
First published:

Tags: Local News, Theni