முகப்பு /தேனி /

மூல வைகையாற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி

மூல வைகையாற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி

X
வைகையாற்றில்

வைகையாற்றில் நீர் வரத்து

கடந்த 3 நாட்களாக வைகை ஆறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

  • Last Updated :
  • Theni, India

பல நாட்களாக வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றுப் பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால், மீண்டும் நீர்வரத்து அதிகரித்துவருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  

மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதே போல கடும் வெயில் காரணமாக மலைப்பகுதியில் உள்ள மரம், புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்பட்டது.

இதனால் பஞ்சம்தாங்கி, மேகமலை ஆகிய மலைப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வைகை ஆறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக வறண்டு மணல் மேடாக காட்சியளித்த வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos

    மேலும் வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்தின் காரணமாக கோடையில் அச்சுறுத்தி வந்த குடிநீர் தட்டுப்பாடும் தற்போது அடியோடு நீங்கி உள்ளது

    First published:

    Tags: Local News, Theni