முகப்பு /தேனி /

அச்சுறுத்தும் அரிசி கொம்பன்..! மேகமலைக்கு செல்ல தொடரும் தடை..!

அச்சுறுத்தும் அரிசி கொம்பன்..! மேகமலைக்கு செல்ல தொடரும் தடை..!

மாதிரி படம்

மாதிரி படம்

Meghamalai | தேனி மாவட்ட வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினரால் யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் மேகமலை கோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அரிக்கொம்பன்  என்ற அரிசிக்கொம்பன் என்னும் ஒற்றை காட்டுயானை நுழைந்துள்ளது.

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட சாந்தாம்பாறை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்து வந்த இந்த யானை நடத்த 29.04.2023 அன்று கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, 30.04.2023 அன்று அதிகாலை 5 மணியளவில் கேரள மாநிலம், பெரியார் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முல்லாக்குடி எனும் பகுதியில் விடப்பட்டது.

அச்சுறுத்தும் அரிசி கொம்பன்

நேற்றைய நிலவரம்

இந்நிலையில், இந்த ஒற்றை காட்டு யானை கடந்த 01.05.2023 அன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைபுலிகள் காப்பகம், மேகமலை கோட்டம், கூடலூர் வனச்சரகத்திற்குட்பட்ட தமிழக வளப்பகுதிக்குள் நுழைந்தது. தற்போது நேற்று (07.05.2023) காலை நிலவரப்படி அரிசிக்கொம்பன் காட்டுயானை சின்னமனூரிலிருந்து மேகமலை ஹைவேஸ் செல்லும் சாலையில் 10-வது வளையில் காணப்பட்டது.

இதையும் படிங்க : 200 ஆண்டுகள் நிறைவு..! ஊட்டியின் அழகை விளக்கும் புகைப்படக் கண்காட்சி..! 

இதனால் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினரால் யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அரிக்கொம்பன்  என்ற அரிசிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கேரள வனத்துறையிடமிருந்து அரிசிக்கொம்பன் யானை நடமாடிய பகுதிகளை புவியிடங்காட்டியின் (GPS) மூலம் பெறப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. 06.05.2023முதல் மேகமலை பகுதிக்கு செல்வதற்கு நுழைவாயிலாக உள்ள வனத்துறையின் தென்பழனி சோதனைச்சாவடி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?

பாதுகாப்பு பணிக்காக 20 காவலர்கள் தென்பழனி சோதனைசாவடி பகுதியிலும், 20 காவலர்கள் மேகமலை ஹைவேவிஸ் பகுதியிலும் மாவட்ட காவல் கன்காணிப்பாளர் மூலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரிசிக்கொம்பன் யானையின் கழுத்துபகுதியில் உள்ள Receiver கருவியில் செயற்கைக்கோள் மூலமாக கிடைக்கும் சமிக்ஞைகளை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு துணை இயக்குநர் மூலமாக பெற்று கண்காணிப்பட்டு வருகிறது.

தொடர் கண்காணிப்பு

மேலும், யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு WWP என்ற அமைப்பின் மூலமாக ஒரு VHF Receiver பெறப்பட்டுள்ளது. மேலும், யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடலூர், கம்பம் (கிழக்கு) மற்றும் சின்னமனூர் வனச்சரக அலுவலர்கள் தலைமையில் 3 தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டத்தை இரவு பகலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

top videos

    எனவே மேகமலை வளப்பகுதியில் அரிசிக்கொம்பன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், மேகமலை வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா கேட்டுக்கொண்டுள்ளார்.

    First published:

    Tags: Local News, Theni