Home /theni /

ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்..

ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்..

Home guard 

Home guard 

Theni District: தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தால் சமூக சேவையில் ஈடுபாடு உள்ள உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல் பணியில் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் படிக்கவும் ...
    தேனி மாவட்ட காவல்துறையின் ஊர்க்காவல் படையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என தேனி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 54 ஆண்கள் மற்றும் 07 பெண்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

    விண்ணப்பம் முழுவதும் நிரப்பி உரிய ஆவணங்களுடன் இணைத்து நாளை (26.05.2022)-க்குள் நிரப்பி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

    அவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில் வழங்கப்படும் 05 நாட்கள் பணிக்கு (நாளொன்றுக்கு ரூ.560/- வீதம்) படித்தொகையாக (ஊதியம்) ரூ.2800/ வழங்கப்படும்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி