Home /theni /

தேனியில் வாக்காளர் அடையாள அட்டையை நொடிகளில் தரும் இயந்திரம்... எங்க இருக்கு? என்ன வழிமுறை?

தேனியில் வாக்காளர் அடையாள அட்டையை நொடிகளில் தரும் இயந்திரம்... எங்க இருக்கு? என்ன வழிமுறை?

தேனியில்

தேனியில் வாக்காளர் அடையாள அட்டையை நொடிகளில் தரும் இயந்திரம்...

Theni Voter Card Machine | ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக வழங்கும் இயந்திரம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni
சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டையை தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவிலுள்ள இயந்திரம் மூலம் உடனே இலவசமாக பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரத்தில் எப்படி வாக்காளர் அடையாள அட்டையை பெறும் விவரங்களை தேர்தல் அதிகாரி பகிரும் செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..

வாக்காளர் இயந்திரம் :-

சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டை அல்லது புதிதாக விண்ணப்பித்த வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக இலவசமாக வழங்கும் தானியங்கி இயந்திரம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது .

ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக வழங்கும் இயந்திரம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதியதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் அல்லது சேதம் அடைந்த, தொலைந்த வாக்காளர் அடையாள அட்டை பெற இ சேவை மையம் மூலமாக முதலில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது தேசிய வாக்காளர் சேவை ( NVSP ) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பெற பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து வாக்காளர் தனது அடையாள அட்டையை பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். வாக்காளர் பதிவு செய்த நாளில் இருந்து வாக்காளர் அட்டை அவரது முகவரிக்கு தபால் மூலம் வந்து சேருவதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் தேவைப்படும்.

ஆனால் தற்போது உடனடியாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவு செய்து, வாக்காளர் அடையாள அட்டையை பெற அதிகாரிகள் அனுமதி வழங்கிய உடனே தானியங்கி இயந்திரத்தின் மூலம் உடனடியாக முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இணையதளம் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் வழங்கப்படும் . அந்த ஓடிபி எண் மூலம் உருவாகும் கியூ ஆர் ( QR) கோட்-ஐ கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் உள்ள உடனடி அடையாள அட்டை வழங்கும் இயந்திரத்தின் மூலம் ஸ்கேன் செய்யும் பொழுது உடனடியாக தானிய இயந்திரம் வாக்காளர் அடையாள அட்டையை பிரிண்ட் செய்து கொடுக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில் , \"தானியங்கி இயந்திரம் மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வாக்காளர்களுக்கு நேரம் விரயம் ஆகாது. அடையாள அட்டை பெற நீண்ட நாட்கள் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை . இது முழுக்க முழுக்க இலவசமானது. வாக்காளர் அட்டை பதிவு முதல் அட்டை பெறும் வரை அனைத்து சேவையும் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது . இது தானியங்கி இயந்திரம் அனைத்து நாட்களில் செயல்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தை அணுகலாம்\" என்றனர்
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி