ஹோம் /தேனி /

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி பல்லவராயன்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு 

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி பல்லவராயன்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு 

X
ஜல்லிக்கட்டு 

ஜல்லிக்கட்டு 

Theni News | கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லவராயன்பட்டி கிராமத்தில்ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி பல்லவராயன்பட்டியினை சேர்ந்த கிராம மக்கள் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தை மாதம் தொடங்கி விட்டாலே வீரத்துக்கு பேர் போன ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். குறிப்பாக தமிழகத்தில் அலங்காநல்லூர் பாலமேடு, தேனி மாவட்டத்தில் உள்ள பல்லவராயன் பட்டி அய்யம்பட்டி பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ்பெற்றது.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது போல தேனி மாவட்டத்திலும் பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி  உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி தேனி மாவட்டத்தில் நடத்தப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, பல்லவராயன்பட்டி கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி திருக்கோவிலுக்கு கிராம மக்கள் சார்பாக வல்லடிகாரர் சுவாமி திருவிழாவினை முன்னிட்டு 12.2.2023 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து  ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க கோரி பல்லவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த பூசாரி செம்புலி, கிடாவெட்டி மந்தையன், பொறுப்பாளர்கள் பவுன், பவுன்ராஜ் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்

First published:

Tags: Jallikattu, Local News, Theni