Home /theni /

தேனியில் சுதந்திர தினத்தன்று 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

தேனியில் சுதந்திர தினத்தன்று 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி 130 ஊராட்சிகளிலும், காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. அப்போது, ஊராட்சிகளில் நடக்கும் பிரச்னைகள், வரவு செலவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

    75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியேற்றி வைக்க வேண்டும்.

    சுதந்திர தினத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

    ஊராட்சிகளில் தலைவருக்குப் பதிலாக வேறு நபா்கள் கொடியேற்றி குழப்பம் விளைவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்குரிமை பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி