ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி கிராம சபை கூட்டம்... கலெக்டர் முக்கிய அறிவிப்பு...

தேனி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி கிராம சபை கூட்டம்... கலெக்டர் முக்கிய அறிவிப்பு...

கிராம சபை

கிராம சபை

Theni | தேனி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி  உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு  கிராம சபை கூட்டம்  நடக்கும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு சமந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தலையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 130 கிராம ஊராட்சிகளிலும் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவரால் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க : திருடர்கள் உஷார்.. கடை வீதிகளில் மக்கள் கூட்டம்.. தேனி போலீசார் எச்சரிக்கை   

இந்த 130 கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடனும் கலந்துகொள்ளும் வகையில் கிராம சபை கூட்டத்தை நடத்திட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கிராம சபை கூட்டம் நடைபெறும் நாளன்று கொரோனா வழிநெறிமுறை களை பின்பற்றி சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும், இடத்தினை கிருமிநாசினி கொண்டு, சுத்தம் செய்தும், கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளையும் தெரிவிக்கலாம். வீட்டு வரி, சொத்து வரி, பஞ்சாயத்து வரவு செலவீனங்கள், ரோடு, பாதாள சாக்கடை, சாக்கடை, பஸ்வசதி, தொழில் வரி, கருத்துருக்கள் உள்ளிட்டவைகள் மனுவும் அளிக்கலாம். மேலும். இதில் தீர்மானமும் நிறைவேற்றலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Theni