விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பால், முட்டை, ரொட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் 12 இடங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு காலை உணவாக
ரொட்டி, பால், பழம், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்
இந்நிலையில் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞர் அணி சார்பில் குழந்தைகளுக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்..
முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், தேவாரம், உள்ளிட்ட
12 இடங்களில் இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தேவாரம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பகுதியில் அமைந்துள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மனவளர்ச்சி குறைந்துள்ள மாணவ மாணவிகள், ஏழை மாணவ மாணவிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பால் முட்டை ரொட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கித்தினர் கூறுகையில் , " தளபதி புஸ்சி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் , தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி மாவட்ட தலைவர் பிரகாஷ் உத்தரவுபடி, தேவாரம் பகுதியில் உள்ள மனவளர்ச்சிக் குன்றிய மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கியுள்ளோம் . தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களிலும் ஏழை மாணவர்களுக்கு பால், முட்டை, ரொட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்க உள்ளோம்" என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Local News, Theni