தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்த நடிகர் தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாள் இன்று...
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தளபதி விஜய்க்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம்.
அதன்படி இன்று தேனி தென்றல் நகரில் வசித்து வரும் சுமார் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு அரிசி, பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி தலைமை சார்பாக, விஜய் மக்கள் இயக்கம் தேனி மாவட்ட தலைவர் பிரகாஷ் நரிக்குறவ இன பொது மக்களுக்கு வழங்கினார்.
ஜூன் 22-ல் பிறந்தநாள் காணும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தென்றல் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பொது மக்களுடன் கொண்டாடினார் .
நடிகர் விஜயின் தீவிர ரசிகர்களான தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் விஜய்யின் பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது பாடலுக்கு குழந்தை மற்றும் பெண்கள் என குடும்பத்துடன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர்: சுதர்ஸன், தேனி
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.