முகப்பு /தேனி /

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

X
தேனி

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Veerapandi Koumariamman Temple Chariot Festival 2023 | தேனி ஸ்ரீவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் முதல் நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அந்த வகையில் வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா வருடம் தோறும் சித்திரை மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 7 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான முதல் நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதன்படி வண்ண பட்டுடுத்தி மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் திருத்தேரில் அமர்ந்து காட்சி தந்ததைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருக்க தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த தேரோட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    First published:

    Tags: Local News, Theni