ஹோம் /தேனி /

வீரபாண்டி கோவில் ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

வீரபாண்டி கோவில் ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

X
வீரபாண்டி 

வீரபாண்டி 

Veerapandi Mullaiperiyar |  தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் செல்லும் முல்லைப்பெரியாறில் நேற்று தர்ப்பணம் கொடுப்பதற்கு பொதுமக்கள் வருகை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தை அமாவாசையை முன்னிட்டு வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக  ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தினர். புண்ணிய ஸ்தலம், முக்கிய நீர் நிலைகள் என இதற்காக பொதுமக்கள் அதிகம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் செல்லும் முல்லைப்பெரியாறில் நேற்று தர்ப்பணம் கொடுப்பதற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.‌ ஆன்மீக ஸ்தலமாக வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் கருதப்படுவதால் கோவில் அருகே செல்லும் முல்லைப்பெரியாற்றில் தை அமாவாசையை ஒட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.‌

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் வீரபாண்டியில் உள்ள முல்லையாற்றின் கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தும், வழிபாடு செய்தும், ஆற்றில் நீராடி பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கியும் வழிபாடு செய்தனர். தை அம்மாவசையை முன்னிட்டு தர்ப்பணம் வழங்கப்பட்டதால் வீரபாண்டி முல்லை பெரியாற்றில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

First published:

Tags: Local News, Mullai Periyar, Theni