Home /theni /

தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - குஷியான பள்ளி மாணவர்கள்.!

தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - குஷியான பள்ளி மாணவர்கள்.!

மாணவர்கள்

மாணவர்கள்

Theni District: வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மே 13ம் தேதி உள்ளுர் விடுமுறை வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது . 

    தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா நேற்று ( 10.05.2022) தொடங்கி 17.05.2022 அன்று வரை நடைபெறவுள்ளது. மே 10ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில் முதல் நாளான நேற்று கௌமாரியம்மன் மலா் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வந்தார். அதனை தொடர்ந்து இன்று முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது. மே 12-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

    அதனைத் தொடர்ந்து மே 13-ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயில் திருத்தோவடம் பிடித்தல், நடைபெற உள்ளது. மே 14, 15 ஆகிய தேதிகளில் ரத வீதியில் தேரோட்டம், மே 16-ஆம் தேதி தோ நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ தடம் பாா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் கௌமாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

    உள்ளூர் விடுமுறை :-

    வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால், திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வருவதுண்டு.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக 13.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது

    இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் 28.05.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    மேலும், உள்ளுர் விடுமுறை தினத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2) பொதுத்தேர்வு வழக்கம் போல் நடைபெறும் எனவும், அவசர அலுவல்களை கவனிக்கும் கருவூலம் சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு , செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி