Home /theni /

வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு.!

வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு.!

வீரபாண்டி கல்லூரி

வீரபாண்டி கல்லூரி

வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கைத் தொடங்குகிறது.

    தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு 5-ம் தேதி தொடங்குகிறது.

    முதல் நாளில் சிறப்பு பிரிவு மற்றும் பி.எஸ்சி கணிதம் பாடத்துக்கான கலந்தாய்வு நடக்கிறது. 6-ம் தேதி பி.எஸ்சி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடத்துக்கும், 8ம் தேதி பி.காம் மற்றும் பி.ஏ பொருளியல் பாடத்துக்கும், 10ம் தேதி பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் 3 நகல்கள், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் கவுசல்யா தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி