ஹோம் /தேனி /

ஜான் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்திய விவசாயிகள்.. முல்லை பெரியாற்றில் தீபம்!

ஜான் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்திய விவசாயிகள்.. முல்லை பெரியாற்றில் தீபம்!

X
ஜான்

ஜான் பென்னிகுயிக்  

முல்லை பெரியாறு அணையை கட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவிதக்கும் விதமாக தீபம் ஏற்றினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

முல்லைப் பெரியாற்றில் தீபம் ஏற்றி ஜான் பென்னிகுவிக்கிற்கு  விவசாய சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் இன்று முல்லைபெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு பாஜக விவசாய அணி மற்றும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் சார்பாக முல்லை பெரியாற்றில் மலர்தூவி தீபம் ஏற்றி நன்றி தெரிவித்தனர்

மரியாதை செலுத்தும் நிகழ்வு :-

தேனி மாவட்டம் வீரபாண்டியில் இன்று கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு பாஜக விவசாய சங்கம் சார்பாகவும் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பாகவும் கர்னல் ஜான் பென்னிகுவிக் திரு உருவ சிலையை வேனில் வைத்து மேலதாளம் முழங்க ஊர்வலமாக வீரபாண்டி முல்லை பெரியாற்று பாலத்திலிருந்து முல்லை பரிமாற்று கரை வரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்

பின்னர் முல்லை பெரியாறு அணையை கட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவிதக்கும் விதமாக பாஜக விவசாய அணி மாநில துணை செயலாளரும் ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவருமான எஸ்.ஆர் தேவர் தலைமையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பாஜக விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் வீரபாண்டி முல்லை பெரியாறு நதியில் தீபம் ஏற்றி மலர்தூவி நன்றி தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய சங்க தலைவர் நாகராஜ் உள்ளிட்ட பாஜக விவசாய சங்கம் மற்றும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

First published:

Tags: Deepam festival, Local News, Theni