முகப்பு /தேனி /

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..

X
தேனி

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Theni Veerapandi Kaumariamman Temple | தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீகௌமாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் சித்திரை திருவிழா வரும் மே 9ம் தேதி துவங்கி மே16ம் தேதி வரை நடைபெறுகிறது.

தற்போது வீரபாண்டி சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கொடியேற்றம் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்றில் இருந்து கோயிலுக்கு முக்கொம்பு வடிவிலான கம்பம் கொண்டு வரப்பட்டு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் காப்புக் கட்டிக் கொண்டனர். கொடியேற்றம் துவங்கி 22வதுநாளில் இருந்து 8 நாட்கள் திருவிழா நடைபெறும்.

இதையும் படிங்க : ஊட்டியில் திடீரென மாறிய வானிலை.. சுற்றுலா பயணிகள் செம என்ஜாய்மென்ட்!

கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடி கம்பம் நடப்படும் அத்தி மரத்திலான முக்கொம்புக்கு, மண் கலயத்தில் முல்லை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவது முக்கிய ஐதீகமாகும். அத்திமரக்கொம்பையே அம்மன், சிவனாக பூஜிக்கிறார் என்பது நம்பிக்கை. 21 நாட்கள் அத்திமரக்கொம்பிற்கே மாவு பூஜை நடைபெறுவது வீரபாண்டி சித்திரை திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    வீரபாண்டி சித்திரை திருவிழாவின் கம்பம் நடும் நிகழ்வில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்

    First published:

    Tags: Local News, Theni