ஹோம் /தேனி /

தேனியில் அம்மன் பாடலுக்கு 500 மாணவிகள் ஒன்றாக பரதநாட்டியம் ஆடி உலக சாதனை

தேனியில் அம்மன் பாடலுக்கு 500 மாணவிகள் ஒன்றாக பரதநாட்டியம் ஆடி உலக சாதனை

X
தேனி

தேனி மாணவர்கள்

தேனி மாவட்டம் வீரபாண்டியில் நாட்டிய பள்ளிகளைச் சார்ந்த 500 மாணவிகள் ஒன்றாக பரதநாட்டியம் ஆடி "டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில்" இடம் பெற்று உலக சாதனை நிகழ்த்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் வீரபாண்டியில் நாட்டிய பள்ளிகளைச் சார்ந்த 500 மாணவிகள் ஒன்றாக பரதநாட்டியம் ஆடி டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்று உலக சாதனை நிகழ்த்தினர்.

உலக சாதனை முயற்சி

தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஸ்ரீ லட்சுமி நாட்டியாலயா மற்றும் ஸ்ரீ ஆனந்த் நாட்டியாலயா ஆகிய நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவிகள் அம்மன் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சாமி தரிசனம் செய்து, நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மாணவிகளுடன் ஓ.பி.எஸ்

இந்த உலக சாதனை முயற்சியில் டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தார் முன்னிலையில், நான்கு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட 500 மாணவிகள் ஒன்றிணைந்து அம்மன் பாடலுக்கு நடனம் ஆடினர்.

அம்மனின் குழந்தை பருவம் முதல் அம்மனாக வடிவம் பெறுவது வரை உள்ள பாடல்களுக்கு பரதநாட்டிய நடனம் ஆடி டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தினர்.

ஓன்று சேர்ந்து ஆடும் மாணவிகள்

பிஞ்சு குழந்தைகளின் நடனத்தை மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கண்டுகளித்தனர்.

பின்னர் பரதநாட்டியம் ஆடிய 500 நடன மாணவிகளுக்கு டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் சார்பாக மாணவிகளின் நடனத்தை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

போடி நாயக்கனூரில் குடிநீர் குழாய் உடைந்து இரண்டு மணி நேரமாக சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி நாட்டியாலயா மற்றும் ஸ்ரீ ஆனந்த் நாட்டியாலயா ஆகிய நாட்டிய பள்ளி நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.

First published:

Tags: Local News, Theni